தொல்பொருளியல் திணைக்களத்தின் கல்விப் பிரிவு மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு தொல்பொருளியில் பணிகளையும் ஆராய்ச்சியையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று தொல்பொருளியல் மரபுரிமைகளின் முகாமைத்துவத்திற்காக மக்களை விழிப்பூட்டுவதை முக்கிய குறிக்கோளாக கொண்ட பொது சேவைகள் பிரிவு 1990 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
1890 இல் இருந்து தொல்பொருளியில் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட பணிகளை கட்புல செவிப்புல ஊடகங்கள் வாயிலாக மக்களிடையே கொண்டு செல்லும் பணியை மென்மேலும் ஒழுங்கமைத்த வகையில் மேற்கொள்ள வேண்டிய அவசியப்பாட்டின் பேரில் உருவாகிய பொதுச்சேவைகள் பிரிவு.
- தொல்பொருளியல்சார் மரபுரிமைகள் பற்றிய மக்களின் புரிந்துணர்வினை மேம்படுத்துதல்.
- ஆராய்ச்சியாளர்களுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.
- தொல்பொருள் நிலையங்கள் மற்றும் நினைவுத்தூபிகளை படமாகத் தயாரிக்க மற்றும் நிழற்படம் பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரங்களை விநியோகித்தல்.
- தொல்பொருள் பணிகள் தொடர்பில் கட்புல - செவிப்புல ஊடகங்கள் மூலமாக விளம்பரஞ் செய்தல்.
- பாடசாலைப் பிள்ளைகள் அரசாங்க உத்தியோகத்தர்களை உள்ளிட்ட பொதுமக்களுக்கு விழிப்பூட்டுவதற்காக செயலமர்வுகளை நடாத்துதல்.
- திணைக்கள வெளியீடுகளை மலிவுவிலையில் சந்தைப்படுத்துதல்.
ஆகிய நோக்கங்களினூடாக தனது கடமைப்பொறுப்புக்களை ஈடேற்றி தேசத்தின் மரபுரிமையை எதிர்கலச் சந்ததியினருக்கு கொடையாக வழங்கும் மாபெரும் தேசியப் பணிக்காகத் தனது பங்களிப்பினை வழங்கி வருகின்றது.
பொதுச்சேவைகள் பிரிவின் தாபனக் கட்டமைப்பு
எமது சேவைகள் பிரிவின் வகைப்பொறுப்பு
தேசிய மரபுரிமையைப் பாதுகாப்பதற்காக தொல்பொருள் விடயத்துறையின் பால் ஆர்வம் காட்டுகின்ற மக்களின் அறிவினை மேம்படுத்துதலும் துறைசார்ந்த கல்விச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான பிரசுரங்களை வெளிக்கொணர்வதற்கான கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்கின் ஊடாக அதற்கு ஒத்துழைப்பு நல்குதல்.
பிரசுரங்களை வெளியிடுதல்
- சுவடிகள் புத்தாய்வு
- நிர்வாக அறிக்கைகள்
- "தாயாத" செய்தித்தாள்
- தேசிய தொல்பொருளியல் மாநாட்டு வெளியீடுகள்
- துண்டுப்பிரசுரங்கள்
- அட்டைகள்
கண்காட்சிகளும் மாநாடுகளும்
- பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கான நடமாடும் கண்காட்சிகள்
- தொல்பொருளியல் கருத்தரங்குகள் (பாடசாலை மாணவர்கள் / பொதுமக்கள்)
- தேசத்தின் மகுடம் கண்காட்சி
- தேசிய தொல்பொருளியல் மாநாடு
மனிதவள அபிவிருத்தி
தொல்பொருளியல் திணைக்களத்தின் தொழில்சார் பணிகள் மற்றும் தொழில்நுட்பத் திறன்களுக்கான குறிப்பாக பயிற்சிக்கான மனிதவளங்கள் அபிவிருத்தி செய்யப்படும்.
உள்நாட்டுப் பயிற்சி அல்லது பொதுவானவை (குறுங்கால / நடுத்தரகால / நெடுங்கால)
- நிர்வாகப் பயிற்சி
- தமிழ்மொழிப் பயிற்சி - Kaizen Management Workshop (தேசிய தொழிற்கல்வி நிறுவகம்)
- கணினி பயிற்சி
- தொழில் பயிற்சி
- தொழில்நுட்ப பயிற்சியும் செயலமர்வுகளும்
2011 ஆம் ஆண்டில் தொல்பொருளியில் திணைக்களத்தின் விசேட நிகழ்ச்சித்திட்டமாக ரஜகல தொல்பொருளியில் நிலையத்தில் தேசிய பயிற்சி நிலையமொன்றை அமைத்தல் மற்றும் ஆய்வுப் பயணங்கள், அகழ்வாராய்ச்சிகள், கட்டடக்கலை, இரசாயனப் பாதுகாப்பு, சுவடிகள் மற்றும் நாணயவியல் போன்ற தொழில்நுட்பப் பிரிவுகளில் உத்தியோகத்தர்க ளுக்கு அவசியமான பிரயோகப் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளல்.
வெளிநாட்டுப் பயிற்சிகள், துறைசார் சிறப்பறிஞர்களின் பயிற்சி
புதுடில்லி தொல்பொருளியல் பட்டநிலைப் பின்படிப்பு நிறுவகத்தில் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வாய்ப்பினை அறித்தல்.
இந்தியாவின் டெக்கென் பல்கலைக்கழகத்திற்கு திணைக்கள உத்தியோகத்தர்களை அனுப்பி வைத்தல்.
தேவைக்கேற்ற பிறவெளிநாட்டுப் பயிற்சிப் பாடநெறிகளுக்காக உத்தியோகத்தர்களை ஆற்றுப்படுத்துதல்.
தொல்பொருளியல் சங்கங்களை நிறுவுதலும் சங்கங்களின் இணைப்பாக்கமும்
மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை வரையறையற்ற தொல்பொருளியில் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கேற்கச் செய்விப்பதன் மூலமாக மரபுரிமைகளின் நிலைத்திருக்கும் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளல்.
- பாடசாலை தொல்பொருளியில் சங்கங்கள். (தற்போது 64 நிறுவப்பட்டுள்ளன)
- சிவில் அல்லது தொண்டர் சங்கங்களும் அமைப்பாண்மைகளும்.
- நிறுவன மட்டத்திலான தொல்பொருளியல் மரபுரிமை அமைப்புக்கள்.
பிற உள்வாரி மற்றும் வெளிவாரி சேவைகள்
- நிழற்படம் எடுத்தல்.
- அச்சிடல் பணிகளின் இணைப்பாக்கம்.
- தொல்பொருளியல்சார் தகவல்கள் தரவுகள் மற்றும் நிழற்படங்கள்.
அனுமதிப்பத்திர விநியோகம்
வரலாற்று ரீதியான மற்றும் தொல்பொருள் ரீதியான நிலையங்களில் இடம்பெறுகின்ற எந்தவிதமான நிழற்படமெடுத்தல் அல்லது வீடியோ படப்பிடிப்பின் போதும் தொல்பொருளியில் திணைக்களத்தின் அனுமதி பெறப்படல் வேண்டும். இங்கு, அனுமதிப்பத்திரம் எதற்காக தேவைப்படுகின்றது? எந்த தொல்பொருளியில் நிலையங்களுக்காக? எத்தினங்களில் நிழற்படப்பிடிப்பு அல்லது வீடியோ படப்பிடிப்பு இடம்பெறுகின்றது? ஆகிய விபரங்களை உள்ளடக்கிய எழுத்திலான கோரிக்கை ஒரு வாரத்திற்கு முன்னர் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நாடகப் படப்பிடிப்புக்காக திரைப்பட வசனப் பிரதியொன்றை சமர்ப்பிக்க வேண்டும். அவ்விடயங்களைப் பரிசீலனை செய்து தொல்பொருளியில் அமைவிடத்திற்கு, நினைவுத் தூபிக்கு, தொல்பொருள் சின்னங்களுக்கு அல்லது தொல்பொருளியல் விடயத்துறைக்கு சேதமேற்படாத வகையிலான கோரிக்கைகளுக்காக அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப் படும்.