முகப்பு சட்டம்

சட்டப்பிரிவு

அறிமுகம்

தொல்பொருள் கட்டளைச் சட்டத்தையும் அதனோடு தொடர்புடைய சட்டங்களையும் பயன்படுத்தி தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்க அவசியமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் அச்சட்டங்களில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளை மீறுகின்ற ஆட்களுக்கு நீதிமன்றம் மூலமாக தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளல்.

தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கும் போது பிரயோகிக்கப்படும் சட்டங்கள்.

  • 1940 இன் 09 ஆம் இலக்கமுடைய தொல்பொருள் சட்டம்.
  • 1998 இன் 24 ஆம் இலக்கமுடைய தொல்பொருள் (திருத்தச்) சட்டம்.
  • 2005 இன் 12 ஆம் இலக்கமுடைய அபராதத்தொகையை அதிகரிப்பதற்கான (திருத்தச்) சட்டம்.
  • 1979 இன் 07 ஆம் இலக்கமுடைய அரசாங்கத்தின் உடைமையை மீளப் பெறுவதற்கான சட்டம்.

பிரிவின் அடிப்படைக் கட்டமைப்பு

சட்டப் பிரிவின் கடமைப் பொறுப்புகள்.

  • தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை மீறுகின்ற ஆட்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல், நீதிமன்றத்தில் நிறுத்தி தவராளிகளுக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளல்
  • காலத்திற்குக் காலம் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்தி அமைத்தல்
  • பொலிஸ் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைப் பாக்கம் செய்தல்
  • திணைக்களத்தில் உள்ள ஊழியர்களின் முறைகேடுகள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை மேற்கொள்ளல், குற்றச்சாட்டுப் பத்திரங்களைத் தயாரித்தல், ஒழுக்காற்று விசாரணைகளின் போது தனிநபர் நியாய மன்றத்தின் முன்னிலையில் குற்றச்சாட்டுகளை நெறிப்படுத்தல்
  • தொல்பொருளியல் பரிசில் நிதியம் மூலமாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்க ளுக்கும் ஆட்களுக்கும் உரிய பரிசில்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளல்.

சட்டப்பிரிவினால் 2010 ஆம் ஆண்டில் ஈடேற்றப்பட்ட கருமங்கள்.

2010 ஆம் ஆண்டில் தொல்பொருள் சட்டத்தின் ஏற்பாடுகளை மீரியமை தொடர்பாக 342 பேர் கைது செய்யப்பட்டமை பதிவாகியதோடு, மேற்படி வழக்குகள் தொடர்பில 171 வழக்குகளுக்காக நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டதோடு அதன்மூலமாக பத்து மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தொகை தவறாளிகளிடமிருந்து அபராதமாக அரசாங்கத்திற்கு அறவிட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011 08:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது