பெருந்தொகையான சுவடிகளும் முற்காலத்தில் சுற்றோட்டத்தில் இருந்த பலவிதமான நாணயங்களும் இலங்கையில் பல்வேறு பாகங்களில் பரவிக் காணப்படுகின்றன. பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் பற்றி சரிவரக் கூறுகின்ற இச்சுவடிகளில் இருந்தும் நாணயங்களில் இருந்தும் இலங்கையின் வரலாற்றினைக் கட்டியெழுப்ப கிடைக்கின்ற உறுதுணை பாராட்டத் தக்கதாகும்.
இறந்தகால உயிர்குணம் பொருந்திய இக்காரணிகள் தொடர்பாக செயலாற்றுவதற்கான சட்டபூர்வ உரிமையானது சுவடிகள் மற்றும் நாணயவியல் பிரிவிடமே ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்த மரபுரிமைகளில் மறைந்துள்ள இறந்தகால சம்பவங்கள் மற்றும் செயற்பாடுகள் மூலமாக மிகவும் தர்க்கரீதியான வரலாற்றினைக் கட்டியெழுப்ப இயலுமென்பது பற்றி மக்களுக்கு விழிப்பூட்டி அவற்றைப் பாதுகாத்து வருங்காலச் சந்ததியினருக்கு உரித்தாக்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பினை சுவடிகள் மற்றும் நாணயவியல் பிரிவு வகிக்கின்றது.
இலங்கையின் எதிர்காலச் சந்ததியினருக்கு சுவடிகள் மற்றும் நாணயவியல் சார்ந்த மரபுரிமையை கொடையாக வழங்கும் நோக்கத்துடன் இப்பிரிவின் எதிர்கால நோக்கு, பணி மற்றும் கடமைப் பொறுப்புகள் வகுக்கப்பட்டுள்ளன.
வகிபாகம்
- அனைத்துவிதமான சுவடிகளையும் நாணயங்களையும் இனங்காணலும் பதிவேடுகளில் பதிதலும்.
- சுவடிகளில் அடிக்கட்டைகளைப் பெறல்.
- சேகரிக்கப்பட்ட வெளிக்களத் தரவுகளையும் அடிக்கட்டைகளையும் பேணிவரல்.
- சுவடிகளை வாசித்தறிதல்.
- ஆய்வுகளை மேற்கொள்ளல்.
- ஆய்வுப் பெறுபேறுகளை வெளிப்படுத்த அவசியமான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- சுவடிகளைப் பாதுகாப்பதற்காக ஏற்புடைய பிரிவுகளுக்கு விதப்புரைகளைச் சமர்ப்பித்தலும் அவசியமான தரவுகளை வழங்குதலும்.
கருத்திட்டங்கள்
- சுவடிகள் மற்றும் நாணயவியல் பிரிவு பல்வேறு கருத்திட்டங்களை அமுலாக்கி வருகின்றது.
- இலங்கையின் கற்சாசன பொருளட்டவணையை மாவட்ட மட்டத்தில் தயாரிக்கும் பணிகள்.
- வரலாற்றரீதியான சுவடிகளைப் பதிவுசெய்து பாதுகாத்தல்.
- நாணயங்களின் பொருளட்டவணைப்படுத்தும் கருத்திட்டம்.
- கற்சாசனங்களைப் பிரசுரிக்கும் கருத்திட்டம்.
- கற்சாசனங்களின் மொழிபெயர்ப்பு மற்றும் பெயர்ப்பலகைளைத் தயாரிக்கும் கருத்திட்டம்.
- கற்சாசனங்களைப் பிரதிபண்ணுதல் மற்றும் பதிவு செய்தலுக்கான கருத்திட்டம்.
தகவல்களை வழங்குதல் |
||
தொலைபேசி இலக்கம் | - | 0112 - 2695609 |
முகவரி | - | சுவடிகள் மற்றும் நாணயங்கள் பிரிவு, சேர் மாக்கஸ் பர்னாந்து மாவத்த, தொல்பொருளியல் திணைக்களம், கொழும்பு. 07. |
சுவடிகள்
எந்தவொரு மேற்பரப்பிலும் எழுதப்பட்ட பண்டைய எழுத்துக்கள் அல்லது குறியீடுகள் சுவடிகள் ஆகும். இலங்கையில் பெரும்பாலும் எழுத்துக்களை எழுத கற்களின் மேற்பரப் பினையே பாவித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக களிமண், கடதாசி, பலகை மற்றும் தங்கம், வெள்ளி, செப்பு போன்ற உலோகங்களும் எழுத்து ஊடகமாகப் பாவிக்கப் பட்டுள்ளது.
- பிராமிக்கு முந்திய எழுத்துக்கள்
- பிராமிக்கு பிற்பட்ட எழுத்துக்கள்
- நிலைமாறுகால பிராமி
- மத்தியகால சிங்களம்
- நவீன சிங்களம்
போன்ற எழுத்தியல் காலகட்டங்கள் உள்ளன. தமிழ், சீன, அரேபிய, பர்சியன், சமஸ்கிருத, பாளி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட கற்சாசனங்கள் உள்ளன. முற்காலத்தில் இலங்கை மீது மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு அழுத்தங்களின் தீவிரத்தன்மை இக்கட்டுரைகள் மூலமாக நன்கு வெளிப்படுகின்றது.
கற்சாசனங்களின் விரிவாக்கம் |
இலங்கை எழுத்துக்களின் தோற்றம் |
|||
|
|
|
பெரும்பாலான சுவடிகளில் பண்டைய மன்னர்களும் மக்களும் பௌத்த விஹாரை களுக்கும் சங்கைக்குரியவர்களுக்கும் அளித்த கொடைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் பண்டைய இலங்கையில் நிலவிய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நிலைமை பற்றிய பல்வேறு தகவல்களை வெளிக்கொணரும் பொருட்டு சுவடிகளிலிருந்து கிடைக்கும் பங்களிப்பு பாராட்டத்தக்கது.
இலங்கையின் பண்டைய நாணயங்கள்
பண்டைய மூதாதையரின் பலம்பொருந்திய கைகளால் முழுநிறைவு செய்யப்பட்ட பண்டைய தாதுகோபுரங்கள், சிலைகள், ஓவியங்கள், குளங்கள் போன்ற படைப்புக்கள் எமது வரலாற்றின் பல்வேறு தடயங்களை எமக்கு எடுத்தியம்புகின்றது. பாரிய அளவிலான ஆக்கபூர்வமான அங்கங்களோடு இயைந்து முழுநிறைவு செய்யப்பட்ட சிறிய நாணயங்கள் கூட எமது மரபுரிமை பற்றி எடுத்தியம்பும் அளவுக்கு தலைசிறந்தவையாகும். தொல்பொருளியியல் ஆராய்ச்சிகள் மூலமாக வெளிக்கொணரப்பட்ட முதாதையர்களின் பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மண்ணுக்கடியில் மறைந்து போன நாணயங்கள் மூலமாக பண்டைய காலத்தில் நிலவிய நாணயங்களின் அகரமுதலியை தயாரிக்கவும். வரலாற்றுக்கு பொருள்விளக்கம் கொடுக்கவும் அளப்பரிய பங்கினை ஆற்றி வருகின்றன.
எமது நாட்டில் நிலவிய இந்த ஆரம்பகால கொடுக்கல் வாங்கல் பற்றிய மிகப் பழைய சான்று மெசோலிதிக் மக்கட் சமுதாயத்திடமிருந்தே கிடைக்கின்றது.
கிறிஸ்துவுக்கு முன் 3வது நூற்றாண்டளவில் இலங்கையில் நாணயப் பாவனையில் தோற்றுவாய் இடம்பெற்றது. இந்த நாணய உற்பத்தி ஒழுங்குமுறையான திட்டத்துடன் இயைந்து காணப்பட்டமைக்கு "ரூபதக" (நாணயப் பணிப்பாளர்) "ரூபாவாபற" (நாணய அங்கீகரிப்பு அலுவலர்) போன்ற நாணயத் தயாரிப்புடன் தொடர்புடைய பதவிப் பெயர்கள் குகையெழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளமை மூலமாக வெளிவாகின்றது. இலங்கையின் நாணயச் சுற்றோட்டம் தொடர்பாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப் புராதனமான எழுத்திலான குறிப்பு இந்த குகைகளைச் சார்ந்ததாகவே காணப்படுகின்றன.
இலங்கையர் உள்நாட்டில் போன்றே வெளிநாட்டு வர்த்தகத்திலும் பிரவேசித்தமை நாணயச் சுற்றோட்டத்தின் தொடக்கத்திலும் வளர்ச்சியிலும் தாக்கமேற்படுத்திய தீவிர காரணியாக அமைந்தது. இறந்த காலத்தில் பாவிக்கப்பட்ட நாணயங்கள் மூலமாக சமகால சமூகத் தகவல்கள் பலவற்றை வெளிக்கொணரத்தக்கதாக அமைந்தது. பண்டைய இலங்கையில் நிலவிய தேசிய நாணய வகைகள் பாவிக்கப்பட்ட காலவரை யறைக்கிணங்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் என தனித்தனியாக இனங்காணப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு நாணயங்கள்
உலோக உற்பத்தியுடன் பரிமாற்ற ஊடகமெனும் வகையில் பல்வேறு வடிவங்களைக் கொண்ட உலோகத் துண்டுகளைப் பாவிக்கப் பழகினார்கள். அதன் பின்னர் ஒழுங் கமைந்த வடிவம் கொண்ட நாணயங்கள் தோன்றியுள்ளன.
- துளையிடப்பட்ட நாணயங்கள்.
- சுவஸ்திகா நாணயங்கள்.
- யானையும் சுவஸ்திகாவும் கொண்ட நாணயங்கள்.
- மரமும் சுவஸ்திகாவும் கொண்ட நாணயங்கள்.
- சிங்கமும் சுவஸ்திகாவும் கொண்ட நாணயங்கள்.
- சிங்க நாணயங்கள்.
- ரிஷப நாணயங்கள்.
- லக்ஷ்மி நாணயங்கள்.
- ரன்கஹவனு மற்றும் அதன் பாகங்கள்.
- மத்திய கால செப்பு மஸ்ஸ நாணயங்கள்.
- பணம்.
- அங்குட்டு மஸ்ஸ / கொக்கி நாணயங்கள்.
வெளிநாட்டு நாணயங்கள்
இலங்கை வரலாற்றுக் காலந்தோட்டே மேலைத்தேய - கீழைத்தேய வர்த்தக மையமாக விளங்கியது. வர்த்தக நடவடிக்கைகளைப் போன்றே இராஜதந்திர உறவுகள், உல்லாச பயணத்துறை மற்றும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்களினால் இலங்கை அடிக்கடி வெளிநாட்டுத் தாக்கங்களுக்கு இலக்காகியது. இலங்கையில் பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கின்ற நாணயங்களிலிருந்து இது உறுதியாகின்றது.
- உரோம
- சோழ - பாண்டிய (சோழ - பல்லவ)
- சீன
- அரேபிய
- பகோதி
- போர்த்துக்கேய
- ஒல்லாந்த
- பிரித்தானிய
துளையிடப்பட்ட கஹாபண
இலங்கையின் பாவிக்கப்பட்ட மிகப்பழைய நாணயமாக துளையிடப்பட்ட கஹாபண இனங் காணப்பட முடியும். இந்த நாணயம் செப்பு மற்றும் வெள்ளி உலோகத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளதோடு தொடக்கத்தில் இரும்பு சிராய்களைப் பாவித்து அவசியமான அளவுக்கு வெட்டித் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்னர் வட்டம், நீள்வட்டம் மற்றும் சதுரம் போன்ற வடிவங்களிலான அச்சுக்கள் உருவாக்கப்பட்டு நிலையை சமமாக்கி உள்ளனர். ஏறக்குறைய 1 - 1.5 சென்றிமீற்றர் அளவினதாக அமைவதோடு 45 கிறேன்ஸ் நிறையுடையது. முகப்புப் பக்கத்தில் பலவிதமான குறியீடுகளைக் காணலாம். கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் இருந்து கி. பி. 1 ஆம் நூற்றாண்டு வரை பாவிக்கப்பட்டுள்ளது.
![]() |
![]() |
முகப்புப்பக்கம் | மறுபுறம் |