ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் புத்தலைப் பிரதேச செயலாளர் பிரிவைச் சார்ந்த ஒக்கம்பிடிய மாளிகாவிலை கிராமத்தில் அமைந்துள்ளது. கொழும்பு மொனராகலை பிரதான வீதியில் 154 மைல் கட்டையை அண்மித்து கும்புக்கன சந்தியில் வலது புறம் உள்ள பாதையில் 08 மைல் போனபோது இந்த இடம் சந்திக்கின்றது.
கி.பி. 6 ம் நூற்றாண்டிலிருந்து 08 ம் நூற்றாண்டு காலம் வரை சேர்ந்ததென மதிக்கப்படும் 300 ஏக்கர் அளவு விரிவடைந்த மாளிகாவிலை புண்ணிய பூமியில் சிலை மண்டபத்தின் சிதைவுகளும் ஆச்சிரமத் தொகுதியின் சிதைவுகளும் காணக்கிடைக்கின்றது. தொல்லியல் நிபுணர்களின் கருத்தின்படி வம்சக் கதைகளில் குறிப்பிடும் "அரியகர விகாரை" என்பதாக மதிக்கப்படுகின்றது. சூலவம்ச எனும் நூலின்படி கி.பி. 667 – 683 ல் ஆட்சி செய்த அக்கபோதி அரசனால் உருகுனை நாட்டின் கணகாமை எனுமிடத்தில் பார்வையற்றோருக்கும் நோயாளிகளுக்கும் வைத்தியசாலையும் சிலை மண்டபமும் செய்வித்தது இந்த இடமென நம்பப்படுகின்றது.
சிதைவுகளாக உள்ள சிலை மண்டபம் வணங்குவதற்காக பாவித்த பாதைகள் உள்ள இடங்களும் இருந்ததற்கான தடயங்கள் இருந்ததாக தெரிகின்றது. கி.பி. 7 ம் 8 ம் நூற்றாண்டுகள் என மதிக்கப்படும் புத்தர் சிலை 37 அடி 10 அங்குலமாகும். நிற்கும் நிலையிலான புத்தர்ச் சிலை அபய எனும் சமிக்ஞை உடையதாகும். சிலை மண்டபத்திற்கு முன் உள்ள சந்திரவட்டக் கல் விசேட ஆக்கமாகும்.