செயற்பாடுகள்
- அனைத்துப் பாதுகாப்பான நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருளியல் தடைசெய்யப்பட்ட காரணிகளைப் பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மற்றும் அவற்றைச் சிறந்த முறையில் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள்.
- புராதன நகர மத்திய நிலையங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் திட்டமிடல், நடைமுறைப்படுத்தல், மேற்பார்வை செய்தல்.
- கட்டிட நிர்மாணக் கலை காரணிகளை அறிக்கையிடல்.
- பேணிப் பாதுகாப்பதற்கான முன்மொழிவுகளைத் தயாரித்தல்.
- பேணிப் பாதுகாக்கும் பணிகளை நடைமுறைப்படுத்தல்.
- பேணிப் பாதுகாக்கும் அறிக்கைகளைத் தயாரித்தல்.
- தொல்பொருளியல் நிலங்களுக்கருகில் புதிய நிர்மாணங்களை முகாமைப்படுத்தல், செயற்படுத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
கட்டிட நிர்மாணக் கலை பிரிவின் மூலம் பொதுமக்களுக்கு நிறைவேற்றப்படுகின்ற கடமைகள்.
- நாட்டில் பேணிப் பாதுகாக்க வேண்டிய நினைவுச் சின்னங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளைப் பரிசீலனை செய்து பேணிப்பாதுகாப்பதற்காக ஆற்றுப்படுத்துதல்.
- மத நிலையங்கள், நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்கள் அல்லது ஏனைய தேவைகளுக்குத் தேவைப்படுகின்ற திட்டங்களை வழங்குதல்.
- ஆய்வாளர்களுக்கு, பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புராதன கட்டிட நிர்மாணக் கலை தொடர்பான தகவல்களை வழங்குதல்.
- கட்டிட நிர்மாணக் கலையைப் பேணிப் பாதுகாக்கும் பணிகளின்போது தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்.
பிரிவின் அடிப்படைக் கட்டமைப்பு
இற்றைவரை மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய கருத்திட்டங்கள்
- மிரிசவெட்டிய தாதுகோபுரத்தைப் பேணல் - 1992.
- அனர்த்தத்தின் பின்னர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையைப் பேணல் - 1998.
- தம்பேகொட போதிசத்துவர் சிலையைப் பேணல் - 1990.
- கட்டுவன ஒல்லாந்தர் கோட்டையைப் பேணல் - 2008.
தற்பொழுது செய்துகொண்டிருக்கின்ற முக்கிய கருத்திட்டங்கள்.
- யாழ்ப்பாணக் கோட்டையைப் பேணல்.
- திருகோணமலை புராதன கப்பல் ஆணையாளர் கட்டிடத்தைப் பேணல்.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் முக்கிய கருத்திட்டங்கள்.
- தீகவாபி தாதுகோபுரத்தைப் பேணல்.