அறிமுகம்

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களமானது, இலங்கையில் இந்து மத விவகாரங்கள் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பான திணைக்களமாகச் செயற்படும் வகையில், 1985 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் திகதியின் (1985 / 123-12) என்ற இலக்க அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக, 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாந் திகதி அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது.

நோக்கு

" முன்மாதிரியான நல்லொழுக்கமுள்ள ஒரு இந்து சமூகத்தை நோக்கி"

செயற்பணி

புத்தாக்கம், குழுப்பணி மற்றும் சமூக ஆதரவு மூலம் தரமான பயனாளர் மையத் திட்டங்களை வழங்குவதன் மூலம் இந்து சமயத்தைப் பாதுகாத்தல், மேம்படுத்தல் மற்றும் பரவச்செய்தல்.

குறிக்கோள்கள்

  • ஒழுக்கப் பண்புகள் மற்றும் சமய  விழுமியங்களின் வழி நடக்க இந்துச் சிறார்களுக்கிடையே   இந்துசமயக் கல்வியை ஊக்குவித்தல்..
  • இந்துசமயத்தையும் கலாசாரத்தையும் அபிவிருத்தி செய்து பேணுவதற்காக இந்துசமய நடைமுறைகளை பேணுதல்
  • இந்துசமய கலாசார ஆராய்ச்சியை அபிவிருத்தி செய்தலும் இந்துசமய, கலை மற்றும் கட்டிடக்கலை தொடர்பான உயர்ந்த எண்ணத்தினை பொதுமக்களிடையே பரப்புலும்
  • தமிழ் கலைஞர்களின் பங்களிப்புகளின் மூலம் தமிழ் கலைகளைப் பாதுகாத்து  மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு கையளித்தல்.
  • இந்து மரபுகளை அடிப்படையாகக் கொண்ட கலாச்சார, சமூக, மத மற்றும் ஆன்மீக வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக இந்து கோவில்கள் மற்றும் இந்து அமைப்புகளை ஊக்குவித்தல்.


இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 14 நவம்பர் 2022 06:28 )
 
மார்ச் 2023
ஞா தி செ பு வி வெ
26 27 28 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1

செய்திகளும் சம்பவங்களும்

கெளரவ பிரதமரின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில் கொண்டாடும் தைத்திருநாள் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமான மகிமை பொருந்திய நாளாகும். ... மேலும் வாசிக்க